Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.425 கோடி முதலீட்டைத் திரட்டி கெத்து காட்டும் மை டிவிஎஸ்

ரூ.425 கோடி முதலீட்டைத் திரட்டி கெத்து காட்டும் மை டிவிஎஸ்
டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் ஆர். தினேஷ் மற்றும் கிரசென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பத்ர் ஜாஃபர்

குறுகிய காலத்தில் 25 முதல் 35 சதவீதம் வரை வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மை டிவிஎஸ் (myTVS) ஆட்டோமொபைல் ஆஃப்டர் மார்க்கெட் தளம், யுஏஇ-யைச் (UAE) சேர்ந்த கிரசென்ட் என்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.425 கோடி முதலீட்டை திரட்டியுள்ளது.

சிஇ-இன்வெஸ்ட்ஸ் (CE-Invests) தலைமையில் நடைபெற்ற சீரிஸ் டி (Series D) முதலீட்டின் மூலம், இந்தியாவில் வளர்ச்சியை விரைவுபடுத்துவதுடன் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (MENA) சந்தைகளிலும் விரிவடைய மை டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் மை டிவிஎஸ், தனது செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்த உள்ளது. இதன் மூலம் சேவைகளை மேலும் விரிவுபடுத்தவும், செயல்பாடுகளை அதிக அளவில் மேற்கொள்ளும் வகையில் தளத்தை வலுப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறுகிய காலத்தில் 25 முதல் 35 சதவீதம் வரை வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மை டிவிஎஸ் தளத்தின் மூலம் வாகனப் பழுது மற்றும் பராமரிப்பு, உதிரிபாகங்கள், டயர்கள், பேட்டரிகள், காப்பீடு மற்றும் அவசர சாலை உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

மை டிவிஎஸ் இதற்கு முன்பு லிங்கோட்டோ (Lingotto) நிறுவனத்திடமிருந்து ரூ.203 கோடியும், கேஸ்ட்ரோல் (Castrol) நிறுவனத்திடமிருந்து ரூ.487 கோடியும் என மொத்தம் சுமார் ரூ.690 கோடி முதலீட்டைத் திரட்டியுள்ளது. தற்போது நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட கேரேஜ்கள் , 10,000 சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஒரு கோடி நேரடி மற்றும் மறைமுக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

இந்த முதலீடு இந்தியாவில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், சர்வதேச விரிவாக்கத்துக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
17 ஆயிரம் விவசாயிகளுக்கு ஜாக்பாட்: வேளாண் இயந்திரமயமாக்கலுக்கு ரூ.216 கோடி ஒதுக்கீடு
அடுத்த செய்தி
தொழில் துறையை வழிநடத்த தெரியாத முதல்வர் விஜய்?: ஜிஎஸ்டி வருவாயை காரணம் காட்டும் நயினார்!

தொடர்புடைய செய்திகள்